ஒரேயொரு போஸ்டர் வெளியிட்டு அனைவரையும் தன் படத்தை பற்றியே பேச வைத்தார் ரத்ன குமார்.?

15

அமலா பாலின் ஆடை படத்தில் ரஜினியின் தீவிர ரசிகரான பிஜிலி ரமேஷ் நடிக்கிறார். ரத்ன குமார் இயக்கத்தில் அமலா பால் நடித்து வரும் படம் ஆடை. ஆடை என்று பெயர் வைத்துவிட்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் அமலா பால் ஆடையில்லாமல் டாய்லெட் பேப்பரை உடலில் சுற்றிக் கொண்டு போஸ் கொடுத்திருந்தார். ஒரேயொரு போஸ்டர் வெளியிட்டு அனைவரையும் தன் படத்தை பற்றியே பேச வைத்தார் ரத்ன குமார்.

ரத்ன குமார் படத்தை எப்படி விளம்பரம் செய்வது என்ற யுக்தி ரத்ன குமாருக்கு நன்றாக தெரிந்துள்ளது. அவர் போஸ்டர் வெளியிட்டு பல நாட்கள் ஆனாலும் இன்றும் ஆடை என்ற வார்த்தையை கேட்டால் அமலா பாலின் அந்த போஸ் தான் பலருக்கும் நினைவுக்கு வருகிறது. ஒரு படத்திற்கு இது தானே வேண்டும். நினைத்ததை சாதித்துவிட்டார் ரத்ன குமார்.

பிஜிலி ரமேஷ் ரஜினியின் தீவிர ரசிகரான பிஜிலி ரமேஷ் யூடியூப் வீடியோ மூலம் பிரபலமானார். அவர் தற்போது படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஆடை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பிஜிலி நடித்துக் கொண்டிருக்கிறாராம். கடந்த 10 நாட்களாக அவர் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார். இருப்பினும் பிஜிலியின் கதாபாத்திரம் குறித்த விபரம் வெளியாகவில்லை.

அமலா பால் நயன்தாரா நடிப்பில் வெளியாகி ஹிட்டான கோலமாவு கோகிலா பட விளம்பர பாடலில் பிஜிலி ரமேஷ் டான்ஸ் ஆடியிருந்தார். இந்நிலையில் அமலா பால் படத்தில் நடிக்கிறார். இது தவிர அவர் கையில் மேலும் சில படங்கள் உள்ளன. பிஜிலிக்கு ரஜினி ரசிகர்களின் அமோக ஆதரவு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஹாலிவுட் ஆடை போஸ்டரை பார்த்தவர்கள் இது ஹாலிவுட் படத்தின் காப்பி என்றார்கள். இருப்பினும் ஆடை படம் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. படத்தில் அமலா பாலுக்கு ஜோடி எல்லாம் கிடையாது. மெச்சூரான ஆடியன்ஸுக்காக படத்தை எடுத்து வருகிறார் ரத்ன குமார். அமலா பாலுக்கு இந்த படம் கை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.