இரும்பு பெண்மணி அம்மா அவர்களின் 70 வது பிறந்த தினத்தை முன்னிட்டு அம்மாவின் சாதனைகள் அடங்கிய சிறப்புமலர் பென்ஸ் குழுமத்தின் சார்பில் வெளியிடப்பட்டது. தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் முனைவர் க.குமார் பங்கேற்ப்பு:

14

 

பென்ஸ் குழுமத்தின் சார்பிலும் பென்ஸ் நீயூஸ் சார்பிலும் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா அம்மையார் அவர்களின் சாதனைகள் மற்றும் மக்கள் மத்தியில் அவர் நீங்காத இடத்தை பிடித்ததன் காரணங்கள் அடங்கிய தொகுப்புகளை அம்மா அவர்களின் 70 வது பிறந்த தினத்தை முன்னிட்டு மிக பிரமாண்டமான முறையில் சிறப்புமலர் இன்று நட்சத்திர ஹோட்டலில் வைத்து நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் தலைமைச் செயலகம் அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கத்தின் சார்பில் மாநிலத் தலைவர் முனைவர் க.குமார் தலைமையில் நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் துவக்க விழாவாக குத்துவிளக்கேற்றப்பட்டது.மாநிலத் தலைவர் முனைவர் க.குமார் குத்துவிளக்கேற்றினார்.அதனைத் தொடர்ந்து அம்மா வின் சாதனைகள் அடங்கிய புத்தகம் சாமி ஜி வெளியிட்டார்கள்.பாதர் சூசை ஜயா அவர்கள் பெற்று கொண்டார்.இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முனைவர் க.குமார் அவர்கள் பேசியதாவது:
அனைவருக்கும் மாலை வணக்கம். உலகம் போற்றும் உன்னத தலைவியாகவும் இன்று இரும்பு பெண்மணி என்று அனைவராலும் போற்றப்படும் அம்மா அவர்களின் 70 வது பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பிதழ் வெளியிடவேண்டும் என்று முடிவு செய்த பென்ஸ் நிறுவனம் குழுமத்திற்க்கும் அதன் நிர்வாக இயக்குனர் டாக்டர். பென்ஸ் சரவணன் அவர்களுக்கும் தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சஙகத்தின் சார்பில் முதலில் நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.ஏழை எளிய மக்களின் விடி வெள்ளியாக விளங்கிய அம்மா அவர்களின் பிறந்தநாள் விழா சிறப்பாக அமையும் விதத்தில் சிறப்பிதழ் வெளியிடுவது மிகுந்த மனமகிழ்ச்சி அப்படி பட்ட மகத்தான தலைவியின் நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்டதை பெருமையாக கருதுகிறேன். இந்த நிகழ்ச்சிக்கு தலைமை வகிக்கும் பென்ஸ் நிர்வாக இயக்குநரும் பென்ஸ் நியூஸ் வெளியீட்டாளருமான எனது அன்பு சகோதரர் டாக்டர் D.பென்ஸ் சரவணன் அவர்களே இந்த அருமையான நிகழ்ச்சிக்கு முன்னிலை வகிக்கும் எம்.பி.குரூப்ஸ் நிர்வாக இயக்குனர். எம்பி புருஷோத்தமன் அவர்களே , மற்றும் கல்வி தந்தை என்று போற்றப்படும் இந்திய குடியரசு கட்சியின் தலைவரும் மும்பை தமிழன் பத்திரிகையின் ஆசிரியருமான பாதர் எம்.ஏ.சூசை ஜயா அவர்களே ,சக்தி ஏழுமலை அவர்களே மற்றும் இந்த விழாவில் வரவேற்புரை நிகழ்த்துவதற்காக வருகை தந்துள்ள எனது அருமை சகோதரரும் பென்ஸ் நீயூஸ் ஆசிரியருமான அரிமா விஜயகுமார் அவர்களே உங்கள் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறேன்.அம்மா அவர்களின் 70 வது பிறந்தநாள் சிறப்பிதழை வெளியீட்டு வாழ்த்துரை வழங்குவதற்காக இங்கு வருகை புரிந்துள்ள அனைவரையும் வருக வருக என தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கத்தின் சார்பில் வரவேற்கிறேன். ஏழைகளின் இதய தெய்வமாக விளங்கும் அம்மா அவர்களை பற்றியும் அவர்களின் சாதனைகள் ,மற்றும் சிறப்புகளை பற்றி பேச வேண்டும் என்றால் பேசி கொண்டே இருக்கலாம் நேரம் காணாது. இந்த நிகழ்ச்சியில் ஒரு சில கருத்துகளை பதிவிட விரும்புகிறேன். தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கத்தை பொறுத்தவரையில் அம்மா அவர்களுக்கு இக்கட்டான சூழ்நிலையில் கூட முதலில் குரல் கொடுத்த அமைப்பு என்ற பெயரை பெற்றதை இந்த தருணத்தில் பெருமையாக கருதுகிறேன். இலங்கை அரசு ஒரு பெண் என்று பாராமல் அம்மா அவர்களை இழிவுபடுத்தும் வகையில் இணையத்தளத்தில் கார்ட்டூன் ஆக சித்தரித்து வெளியிட்ட போது ஒரு பெண் முதலமைச்சர் ,இரும்பு பெண்மணியை அசிங்கப்படுத்துவதா? என இலங்கை அரசை கண்டித்து சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை என் தலைமையில் பத்திரிகை தோழர்கள் ஒத்துழைப்போடு முற்றுகையிட்டு எங்களது அமைப்பு சார்பில் கண்டனத்தை பதிவுயிட்டோம். அதுபோல் அம்மா வுக்கு எதிராக கர்நாடகா நீதி மன்றம் தீர்ப்பு வழங்கிய போது இந்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என குரல் கொடுத்து போராட்டம் களம் கண்டது தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கம்.அதுபோல் E.V.K.S இளங்கோவன், விஜயகாந்த் போன்றவர்கள் ஓரு பெண் என்று பாராமல் அப்போதைய முதல்வர் அம்மா அவர்களை இழிவுபடுத்திய போது அதனை கண்டிக்கும் வகையில் ஆர்ப்பாட்டம் நடத்தியது எங்கள் அமைப்பு பத்திரிகையாளர்கள் நலன் , பத்திரிகையாளர்கள் உரிமை , மற்றும் பாதுகாப்புக்காக எந்த அளவிற்கு குரல் கொடுத்து வருகிறதோ அதுபோல் சமுதாயத்தில் ஒரு பிரச்சனை தலை தூக்கினாலும் அதனை கண்டிக்கும் வகையில் தலைமைச் செயலகம் அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கம் செயல்படுகிறது.இன்று அம்மா அவர்களின் 70 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவர்களின் சாதனைகள் அடங்கிய சிறப்பிதழ் வெளியிட வேண்டும் என முடிவு செய்த பென்ஸ் குழுமத்திற்கும்,இந்த அற்புதமான நிகழ்ச்சிக்கு வருகை புரிந்துள்ள பல்வேறு பத்திரிகையாளர்கள் அமைப்பை சார்ந்த தோழர்கள்கள் மற்றும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒவ்வொரு நல்ல உள்ளங்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இந்த உலகம் இருக்கும் வரை அம்மா அவர்களின் புகழ் நிலைத்திற்க்கும் வரும் வருடமும் இளைய சமுதாயத்தை சார்ந்த இளைஞர்களுக்கும் பொதுமக்களும் அறிந்திடும் வகையில் அம்மா வின் சாதனை தொகுப்புகளை சிறப்பிதழாக வெளியிட வேண்டும் என இந்த நிகழ்ச்சி வாயிலாக பென்ஸ் குழுமத்திற்கு தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் தாழ்மையான வேண்டுகோள் வைக்கிறேன். அம்மா அவர்களுக்கு மணிமண்டபம் பென்ஸ் குழுமத்தின் சார்பில் கட்டப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்ட பென்ஸ் நிர்வாக இயக்குனர் பென்ஸ் சரவணன் அவர்களுக்கு இந்த நல்ல தருணத்தில் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த அருமையான நிகழ்ச்சியில் கலந்து கொள்ள எனக்கு வாய்ப்பளித்த ஒவ்வொரு நல்ல உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நன்றி வணக்கம் என்று பேசி முடித்தார்.விழா இனிதே நிறைவுற்றது